உ
சிவமயம்
சிவமயம்
தொழுது தூமலர் தூவித் துதித்துநின்றழுது காமுற் றரற்றுகின் றாரையும்பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்எழுதுங் கீழ்க்கணக் கின்னம்ப ரீசனே.
அப்பர் ஸ்வாமிகள் அருளிய
திரு இன்னம்பர் தேவாரம் .
காதற்ற ஊசியும் வாராது காண் உம் கடைவழிக்கே
--- பட்டினத்தார்
திரு ஏகம்ப மாலை :
கல்லாப்பிழையுங் கருதாப்பிழையுங் கசிந்துருகி
நில்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின்அஞ்செழுத்தைச்
சொல்லாப்பிழையுந் துதியாப்பிழையுந்தொழாப்பிழையும்
எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே .
ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே.
சிதம்பரம் :
பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும்;பிறந்துவிட்டால்
இறவா திருக்க மருந்துண்டு காண்இது எப்படியோ
அறமார் புகழ்த்தில்லை அம்பல வாணர் அடிக்கமலம்
மறவா திருமனமே! அதுகாண் நல் மருந்துனக்கே .
தவியா திரு நெஞ்சமே தில்லை மேவியசங்கரனைப் புவியார்ந்திருக்கின்றஞானாகரனைப் புராந்தகனை
அவியாவிளக்கைப் பொன்னம்பலத்தாடியைஐந்தெழுத்தால்
செவியாமல் நீ செபித்தால் பிறவாமுத்தி சித்திக்குமே!
காளஹத்தி :
பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடைசுற்றி
முத்தும் பவளமும் பூண்டுஓடி ஆடி முடிந்தபின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம்பிணங்கள்
கத்துங் கணக்கென்ன? காண் கயிலாபுரிக் காளத்தியே!
வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன்;மாதுசொன்ன
சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டு செய்து
நாளாறில்கண்இடந்துஅப்பவல்லேன்அல்லன்நான்இனிச்சென் று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே?
முன்னை இட்ட தீ முப்பு ரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவ யிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.
திருவாரூர் :
( THIS ONE IS ULTIMATE )
ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநா ளென்(று)
ஊரூர்கள் தோறும் உழலுவீர் நேரே
உளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர்
விளக்கிருக்கத் தீத்தேடு வீர்.
இன்று ,பட்டினத்தடிகளின் சில மந்திரங்களை படித்ததால் , நம் கணக்கில் , திரு இன்னம்பரீசன் நிறைய வரவு வைத்திருப்பார் என்ற எண்ணத்துடன் இந்த பதிவை நிறைவு செய்வோம் .
பட்டினத்தடிகள் திருவடிகள் போற்றி போற்றி
பாம்பன் ஸ்வாமிகள் திருவடிகள் போற்றி போற்றி
ரமண மஹரிஷிகள் திருவடிகள் போற்றி போற்றி










