திருச்சுழியல்
உ
சிவமயம்
திருச்சுழியல்
திருச்சுழியல் சுவாமியை வணங்கி வந்தவரை வணங்கினால் அரசராகுவர் -- என சொல்வது நாவலர் கோமான் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் .
திருவண்ணாமலையில் தங்கி அவனிக்கு ஞானதீபமாய் விளங்கிய ஸ்ரீ ரமண மகரிஷி அவதரித்த .திருத்தலம் .
திருச்சுழியல், மதுரை, இராமேஸ்வரம் ஆகிய மூன்று கோயில்களும் ஒரே அமைப்புடைய கட்டுமானம் என்பர். இத்தலத்து இறைவனை திருமால், இந்திரன், பிரம்மன், சூரியன், கௌதமர், அகலிகை, அருச்சுனன், சேரமான் பெருமான் நாயனார் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர் என்பது சிறப்பு. இத்தலத்தில் பூமிதேவி இறைவனை வழிபட்டிருப்பதால் இறைவனுக்கு பூமிநாதசுவாமி என்ற பெயரும் உண்டு. ஆண்டுக்கு இருமுறை சூரியன் மூலவரின் திருமேனி மீது படரும் பாக்கியம் பெற்றுள்ளது . சுந்தரர் இங்கு சுவாமியை போற்றும் "ஊனாய்உயிர் புகலாய்" எனும்
பதிகத்தின் மூன்றாம் பாடலில் ( பொதுவாக பதிகத்தின் பத்தாம் பாடலில் பதிக பலன் இடம்பெறும் ) வழிபடும் பலன் பற்றி பாடுகிறார் .
கவ்வைக்கடல் கதறிக்கொணர்
முத்தங்கரைக் கேற்றக்
கொவ்வைத்துவர் வாயார்குடைந்
தாடுந்திருச் சுழியல்
தெய்வத்தினை வழிபாடுசெய்
தெழுவார்அடி தொழுவார்
அவ்வத்திசைக் கரசாகுவர்
அலராள் பிரியாளே
முத்தங்கரைக் கேற்றக்
கொவ்வைத்துவர் வாயார்குடைந்
தாடுந்திருச் சுழியல்
தெய்வத்தினை வழிபாடுசெய்
தெழுவார்அடி தொழுவார்
அவ்வத்திசைக் கரசாகுவர்
அலராள் பிரியாளே
திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற தெய்வத்தை வழிபட்டு திரும்புபவரின் திருவடிகளை வணங்குவோர் , தாம் தாம் வாழ்கின்ற நாட்டிற்கு அரசராய் விளங்குவர் ; அவ்வரசிற்குரியவளாகிய திருமகள் அவர்களை விட்டு நீங்காள் .
இது பதிகத்தை பாடுவதால் கிடைக்கும் என்றோ அல்லது திருச்சுழியல் சென்று வழிபாடு செய்தாலோ கிடைக்கும் என்பதல்ல சுந்தரர் வாக்கு திருச்சுழியல் தலத்தை வணங்கியவரை வணங்கினால் கிடைக்கும் நன்மை என்கிறார் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
திருச்சுழியல் சிவனை வணங்கி வருவோரை வணங்கினாலே இத்தகைய நன்மைகளை சுந்தரர் பட்டியலிடுகிறார் என்பது திருச்சுழியல் தல பெருமையை நன்கு உணர்த்துகிறது .
ஆயிரம் ஆண்டுகள் பின்பு வந்த பகவான் ரமணரும் அகர வரிசையில் அண்ணாமலையார் மீது தான் பாடிய அக்ஷரமணமாலையில் , ( அக்ஷரமணமாலை என்பது 108 கண்ணிகள் கொண்ட அண்ணாமலையாரை போற்றி துதிக்கும் பாடல்) ,
அருணாசலம் என அகமே நினைப்பவர்
அகத்தை வேரறுப்பாய் அருணசலா
அகத்தை வேரறுப்பாய் அருணசலா
அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் முற்று
அபின்னமாய் இருப்போம் அருணாசலா
அபின்னமாய் இருப்போம் அருணாசலா
ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய்
இதுவோ உனது அருள் அருணாசலா
இதுவோ உனது அருள் அருணாசலா
காந்தம் இரும்பு போல் கவர்ந்து எனை விடாமல்
கலந்து எனோடு இருப்பாய் அருணாசலா
கலந்து எனோடு இருப்பாய் அருணாசலா
ரமணன் என்று உரைத்தேன் ரோசம் கொளாது
எனை ரமித்திடச் செயவா அருணசலா
எனை ரமித்திடச் செயவா அருணசலா
எனும் வரிசையில்
அன்பொடு உன் நாமம் கேள் அன்பர்தம் அன்பருக்கு
அன்பன் ஆயிட அருள் அருணாசலா
அன்பன் ஆயிட அருள் அருணாசலா
என்று பகவான் ரமணர் பாடுவதில் இருந்து நாம் இதை புரிந்துகொள்ளலாம் .
![]() |
| பகவான் பிறந்த வீடு |
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் திருவடிகள் போற்றி போற்றி
பகவான் ரமண மஹரிஷிகள் திருவடிகள் போற்றி போற்றி
















