தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே!!! பாடுவார் பசி தீர்ப்பாய்!! பரவுவார் பிணி களைவாய்!!! மண்ணுலகிற் பிறந் து நும்மை வாழ்த்தும் வழியடியார் பொன்னுலகம் பெறுதல் தொண்டனேனின்று கண்டொழிந்தேன்



Monday, August 3, 2020

சுந்தரர் பதிகங்களில் மனதை மயக்கும் சொற்றொடர்கள் மற்றும் வரலாற்று குறிப்புகள்

       உ      
 சிவமயம் 
   
   
                          
சுந்தரர் பதிகங்களில் மனதை மயக்கும் சொற்றொடர்கள் 
மற்றும் வரலாற்று குறிப்புகள் ( பாகம் -- 1) .

அருளாளர்களின் வாக்கினில் ஒவ்வொரு எழுத்தும் மகிமை பொருந்தியதே. இருப்பினும் 

  1. அரசாள்வர் ஆணை நமதே --- திருஞானசம்பந்தர்  ஸ்வாமிகள் 
  2. கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியதான கண்டேன்--- அப்பர் ஸ்வாமிகள் 
  3. அத்தா உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே --- சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் 
  4. ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய்  ---  சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்  .

போன்றவை  கேட்பவரை மிகவும்  கவரும் தன்மை உடையவை .


இதை போன்று சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளின் வாக்கில் உள்ள மனதை மயக்கும் சொற்றொடர்கள்  மற்றும் வரலாற்று குறிப்புகளை ,  இங்கு ,  இன்று முதல் , சில பாகங்களில் பார்ப்போம்.


தலம் --- திருவெண்ணைநல்லூர்
பதிகம் --- பித்தா பிறை சூடி
  1. பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
  2. மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை 
  3. அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே 
  4. பெறலாக அருள் பெற்றேன்
  5. ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய் வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய் 
  6. தொழுவாராவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே 
தலம் --- திருப்பரங்குன்றம்
பதிகம் --- கோத்திட்டையும் 
  1. முழு நீறு மெய்ப்பூசுதீர் 
  2. பிணி வண்ணத்த வல்வினை தீர்த்தருளீர் 
  3. பாரோடு விண்ணும் பகலுமாகி பணிமால்வரையாகி பரவையாகி நீரோடு தீயும் நெடுங்காற்றுமாகி நெடு வெள்ளிடையாகி நிலனுமாகி 
  4. அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே . (could be referring chera chola and pandyan kings ) .
தலம் --- திருநெல்வாயில் அரத்துறை 
பதிகம் --- கால்வாய் அகிலும் 

  1. நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில் சொல்லாய் கழிகின்றது  
  2. நினைவார் மனத்தாய் 
  3. ஓடு புனற்கரையாம் இளமை 
  4. உறங்கி விழித்தால் ஒக்கும் இப்பிறவி 
  5. ஒரு நெல்வால் ஊன்ற வருந்தும் உடம்பிதனை 
  6. மணக்கோலமதே பிணக்கோலமதாம் பிறவி இது தான் 
  7. அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய் 
  8. பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப்பெற்றேன் .
தலம் ---  திருவஞ்சைக்களம் 
பதிகம் ---  தலைக்கு தலை மாலை 
  1. தலைக்கு தலை மாலை அணிந்தது என்னே 
  2. சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக்கனியே 
  3. முந்தி தொழுவார் இறவார் பிறவார் 
  4. பாடும் புலவர்க்கு அருளும் பொருளென் 
  5. பரவித்தொழுவார் பெறு பண்டமென்னே 
  6. நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் 
  7. நலனே இனி நான் உன்னை நன்கு உணர்ந்தேன் 
  8. உனை நான் மறவேன்
  9. எனக்கு என்றும் அளிக்கும் மணிமிடற்றன்

திருச்சிற்றம்பலம்

தொழுவாரவர் துயர் ஆயின தீர்த்தல் உனதொழிலே 

 பிழையுளன பொறுத்திடுவர் 

1 comment:

  1. நன்றி..‌‌‌ அருமையான பதிவு

    ReplyDelete