தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே!!! பாடுவார் பசி தீர்ப்பாய்!! பரவுவார் பிணி களைவாய்!!! மண்ணுலகிற் பிறந் து நும்மை வாழ்த்தும் வழியடியார் பொன்னுலகம் பெறுதல் தொண்டனேனின்று கண்டொழிந்தேன்



Tuesday, July 28, 2020

பட்டினத்தடிகள் பாதம் பணிவோம்

உ 
சிவமயம் 


தொழுது தூமலர் தூவித் துதித்துநின்றழுது காமுற் றரற்றுகின் றாரையும்பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்எழுதுங் கீழ்க்கணக் கின்னம்ப ரீசனே.



அப்பர் ஸ்வாமிகள் அருளிய 
திரு இன்னம்பர் தேவாரம் .

காதற்ற ஊசியும் வாராது காண் உம் கடைவழிக்கே
     ---  பட்டினத்தார் 


தத்துவ தெளிவுடைய பட்டினத்தடிகள் என்று பாம்பன் சுவாமிகள் போற்றும் பட்டினத்தடிகள் குருபூஜை வரும் ஞாயிறு  02.08.2020. ஆடி உத்திராடம் ஆகும். மகானின் பதிகங்களில் சிலவற்றை இங்கு காண்போம் . 

திரு ஏகம்ப மாலை :

கல்லாப்பிழையுங் கருதாப்பிழையுங் கசிந்துருகி
நில்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின்அஞ்செழுத்தைச்
சொல்லாப்பிழையுந் துதியாப்பிழையுந்தொழாப்பிழையும்
எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே .

ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே.

 சிதம்பரம் :

பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும்;பிறந்துவிட்டால்
இறவா திருக்க மருந்துண்டு காண்இது எப்படியோ
அறமார் புகழ்த்தில்லை அம்பல வாணர் அடிக்கமலம்
மறவா திருமனமே! அதுகாண் நல் மருந்துனக்கே .

 தவியா திரு நெஞ்சமே தில்லை மேவியசங்கரனைப் புவியார்ந்திருக்கின்றஞானாகரனைப்  புராந்தகனை
அவியாவிளக்கைப் பொன்னம்பலத்தாடியைஐந்தெழுத்தால்
செவியாமல் நீ செபித்தால் பிறவாமுத்தி சித்திக்குமே!

காளஹத்தி :

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடைசுற்றி 
முத்தும் பவளமும் பூண்டுஓடி ஆடி முடிந்தபின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம்பிணங்கள்
கத்துங் கணக்கென்ன? காண் கயிலாபுரிக் காளத்தியே!

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன்;மாதுசொன்ன

சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டு செய்து
நாளாறில்கண்இடந்துஅப்பவல்லேன்அல்லன்நான்இனிச்சென் று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே?


முன்னை இட்ட தீ முப்பு ரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவ யிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.

 திருவாரூர் :

( THIS ONE  IS ULTIMATE )

ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநா ளென்(று)
ஊரூர்கள் தோறும் உழலுவீர் நேரே
உளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர்
விளக்கிருக்கத் தீத்தேடு வீர். 

இன்று ,பட்டினத்தடிகளின் சில மந்திரங்களை படித்ததால் , நம் கணக்கில் , திரு இன்னம்பரீசன் நிறைய வரவு வைத்திருப்பார் என்ற எண்ணத்துடன் இந்த பதிவை நிறைவு செய்வோம் .

பட்டினத்தடிகள் திருவடிகள் போற்றி போற்றி 
பாம்பன் ஸ்வாமிகள் திருவடிகள் போற்றி போற்றி 
ரமண மஹரிஷிகள் திருவடிகள் போற்றி போற்றி 





1 comment: